2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஈவினையில் 40 வாழைக்குலைகள் திருட்டு

Gavitha   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

புன்னாலைக்கட்டுவன் ஈவினைப் பகுதியிலுள்ள வாழைத் தோட்டங்களில், செவ்வாய்க்கிழமை (15) 40 வாழைக்குலைகள் திருடப்பட்டுள்ளதாக வாழைத்தோட்ட செய்கையாளர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறிய ரக வாகனமொன்றில் வந்த இனந்தெரியாத சிலரால் இந்த வாழைக்குலைகள் திருடப்பட்டுள்ளதாகவும் திருடப்பட்ட குலைகள் சுமார் 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியானவையென்றும் செய்கையாளர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் வாழைக்குலைகளின் விலைகள் தற்போது அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில வாரங்களாகவே வாழைக்குலைகள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக செய்கையாளர்கள் தெரிவித்தனர்.

உடுவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில், வாழைக்குலைகள் திருடப்படுவது தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டு பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையிலும் இந்தத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன என செய்கையாளர்கள் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X