2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

உணவு ஒவ்வாமையால் மூவர் பாதிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில், உணவு ஒவ்வாமையால், மூவர் பாதிப்படைந்துள்ளனர்.

இச்சம்பவம், யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இன்று (10) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த திருமணத்துக்கான மண்டப ஏற்பாடுகள் மற்றும் உணவு ஏற்பாடுகள் ஆகியவற்றை, மணமக்கள் வீட்டார் மண்டப உரிமையாளர்களிடமே ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், திருமணம் முடிந்தப் பின்னர் உணவுப் பரிமாறப்பட்ட போது வழங்கப்பட்ட மாமிசக் கறிகள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளன.

அதனை அறியாது, அதனை உட்கொண்டவர்கள், சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளனர். அதனை அடுத்து திருமண வீட்டில் நின்றவர்கள் உணவைப் பரிசோதித்து பார்த்தபோது, கறிகள் பழுதடைந்துள்ளமையைக் கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து, இது தொடர்பில் உடனடியாக கோப்பாய் பொலிஸார் மற்றும் அப்பகுதிச் சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் மற்றும் சுகாதாரப் பரிசோதகர்கள் ஆகியோர், பழுதடைந்த உணவுப் பொருட்களைக் கைப்பற்றி, விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அத்துடன், மண்டபத்தில் வழங்கப்பட்ட ஐஸ்கிறீம் கோப்பையில், உற்பத்தி திகதி மற்றும் முடிவு திகதி என்பன பொறிக்கப்படாததும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த உணவுக்காக ஒருவருக்கு 1,500  ரூபாய் வீதம் பணம், மண்டபத்தினருக்குச் செலுத்தப்பட்டதாகவும் இந்நிலையில், உணவுப் பழுதடைந்தமை தொடர்பில் தாம் மண்டபத்தின் பொறுப்பாளருக்கு அறிவித்த போது, “சாப்பாடு பழுதாபோனால் அதை சமையல்காரரிடம் சொல்லுங்கள்” என பொறுப்பற்ற விதத்தில் தமக்கு பதிலளித்ததுடன், தம்முடன் நாகரிகமாற்ற விதத்தில் நடந்து கொண்டதாகவும், திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .