2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

உதவி பொருள்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

மஹாகருண பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு ஆசிர்வாதத்மக பிரித் சுற்றுலா மேற்கொண்ட பௌத்த குருமார்கள் நேற்று நல்லிணக்க விஜயமாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

வந்த குழுவினர் இனங்களுக்கு இடையில் நல்லுறவு மற்றும் சாமாதாணத்தினை வலிறுத்தும் வண்ணம் பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.

இதன் ஓர் அங்கமாக கடந்த 30 வருட காலத்தில் யுத்தத்தின் பால் பாதிக்கப்பட்டு வறுமைக்கு கோட்டின் கீழ் வாழும் 275 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வைத்தனர்.

போருக்கமுவ ஸ்ரீ ஆலோகராம விகாரை மற்றும் கௌடுமுன்ன இந் சாரராம விஹாரையின் விஹாரதிபதி கின்னலியே ஆயுபால சுவாமிகள் கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த உதவி வழங்கும் நிகழ்வில் 25 கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பேற்றின் பின்னரான உதவி பொருள்களும், சத்துணவுகளும்,  100 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், 150 பேருக்கு உலர் உணவு பொருள்களும் வழங்கிவைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .