2025 மே 09, வெள்ளிக்கிழமை

உயிரிழந்த நபருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம்

Niroshini   / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

நேற்று (27) மாலை உயிரிழந்த நபரின் சடலத்தை, பிசிஆர் பரிசோதனையின் பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காரைநகர் - மொந்திபுலம் பகுதியைச் சேர்ந்த அரியகுட்டி சந்திரகுமாரன் (வயது 55) என்பவர், சளித்தொற்று காரணமாக, காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக, நேற்று (27) மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது, அவர் ஏற்கெனவே உயிரிழந்தவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வைத்திய சமூகம் அச்சம் கொண்டுள்ள நிலையில், உயிரிழந்த நபருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கெப்டு, அதன் முடிவுகள் வெளிவந்த பின்னரே உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X