2025 செப்டெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு கள்ளப்பாடு மீனவ சமூகம் உதவி

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 11 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ. கீதாஞ்சன்

மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே-429 பிரிவுக்குட்பட்ட வத்திராயன் கிராமத்தைச் சேர்ந்த 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான ஜோசப் - பிறேம்குமார் என்பவரும் அவருடைய சகோதரியின் மகனான அருண்குமார் - தணிகைமாறனும் (வயது-21) கடந்த மாதம் 27ஆம் திகதி கடலுக்கு சென்ற இருவரும் உயிரிழந்த நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள்.

இந்நிலையில் இவர்களின் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு  உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு முல்லைத்தீவு கள்ளப்பாடு மீனவ சமூகத்தினரால் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கள்ளப்பாடு மீனவ சமூகத்தினர் இன்று நேரில் சென்று அவர்களின் துயரத்தில் பங்குகொண்டு அவர்களுக்கான சிறு தொகை பணத்தை கையில் கொடுத்தும் வங்கி புத்தகத்தில் வைப்பிலிட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

இரு குடும்பத்திற்குமாக 100,000 ரூபாய் நிதி உதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .