2025 ஜூலை 23, புதன்கிழமை

உலக சிறுவர் தின நிகழ்வு

George   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவை திணைக்களம் ஏற்பாடுசெய்த சிறுவர் தின நிகழ்வு, நீராவியடியில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை (18) நடைபெற்றது.

'சிறுவர்களுக்கு நட்புறவான சூழல், உலகை மிளரச் செய்யும் அழகிய தேசம்' என்றும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவை திணைக்களத்தின் ஆணையாளர் தி.விஸ்வரூபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார்.

சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட கட்டுரை, சித்திரம், சிறுகதை, பேச்சு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய சிறுவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .