Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஜூன் 13 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து, உடைமைகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ள சம்பவம் வியாழக்கிழமை (13) அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது .
அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் , குறித்த வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள், ஆயுதங்களால் தாக்கி தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது .
"திருநங்கைளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே" என அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள வீட்டில் போடப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நிதர்ஷன் வினோத்
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago