Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்
தமிழர்களுக்கு எஜமான் மாறினாரே தவிர சுதந்திரம் கிடைக்கவில்லையென, வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் இன்று (04) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பிரிட்டிஸ்காரர்களின் கீழ் அடிமையாக இருந்ததை விட சிங்களவர்களின் கீழேயே அடிமைப்படுத்தல்கள் கூடுதலாக உள்ளனவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைமுகமாகவும் மெதுவாகவும் நடத்தப்பட்ட அடக்குமுறைகள், புதிய அரசாங்கம் பதவியேற்றதும் வெளிப்படையாகவும் தீவிரமாகவும் நடக்கின்றனவெனத் தெரிவித்துள்ள அவர்கள், இந்த நிலையிலேயே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய தாங்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தை புறக்கணித்து, துக்க தினமாக அனுஷ்டிப்பதாகவும் கூறியுள்ளனர்.
மௌனித்திருக்கும் தமிழ் அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற செயலையும் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள அவர்கள், இனியாவது தன்னலமாக சிந்திப்பதை விடுத்து, எமது உறவுகளின் விடுதலைக்காகவும் அடக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்காகவும் பாடுபடவேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.
அப்படி செய்யமுடியாதவர்கள் இளைஞர்களுக்கும் விட்டுக் கொடுப்புடன் மக்களுக்காகத் தியாகங்களைச் செய்யக்கூடியவர்களுக்கும் விட்டுக்கொடுத்துவிட்டு, பெருந்தன்மையுடன் ஒதுங்கிக் கொள்ள வேண்டுமென்றும், அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
13 minute ago
51 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
51 minute ago
57 minute ago
1 hours ago