Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 01 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாண மாவட்டத்தில் வௌ;வேறு பகுதிகளில் முறைகேடாக இயங்கி வந்த எட்டு மதுபான நிலையங்;களுக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த மதுவரி திணைக்கள உயர் அதிகாரிகள் தலமையிலான குழுவினர், குறித்த மதுபான நிவையங்களுக்கு சீல் வைத்துச் சென்றதாக மதுவரி திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இயங்கிய 3 மதுபான நிலையங்கள், ஊர்காவற்துறையில் 2, சுன்னாகத்தில் 1, புலோலியில் 1, புத்தூர் சுன்னாகம் வீதியில் அமைந்துள்ள மதுபான நிலையம் ஆகியவற்றுக்கே இவ்வாறு சீல்வைக்கப்பட்டுள்ளதாக அவ் அதிகாரி கூறினார்.
உரிய முறையில் களஞ்சியப்படுத்தாமை, விற்பனை பற்றுச்சீட்டுக்களை முறையாக பேணாமை, வாடிக்கையாளர்களுக்கு அதிக விலையில் மதுபானங்களை விற்பனை செய்தமை, சில்லறை விலையில் சீல் உடைத்து விற்பனை செய்தமை ஆகிய குற்றச்செயல்களுக்காக இவை மூடப்பட்டுள்ளதாக அவ்வதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, 'யாழ். மாவட்டத்தில் மதுபான விற்பனை நிலையங்களில் இடம்பெறும் முறைகேடுகள், மற்றும் விலை அதிகரித்து விற்பனை செய்வது தொடர்பில் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள மதுவரி நிலையங்களுக்கு அறிவித்தால் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கபடும்' என அவ் அதிகாரி மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago