2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

எதிர்காலத்தை நோக்கி பயணிக்க வேண்டும்: அங்கஜன்

George   / 2016 ஜனவரி 30 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

கடந்த காலங்களில் இவ்வாறு இடம்பெற்றது, அவ்வாறு இடம்பெற்றது என பேசுவதை நிறுத்தி எதிர்காலத்தில் மக்கள் நலத்திட்டம் தொடர்பில் பேசுவதுதான் பொருத்தமானதாக அமையும் என ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை (30) இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இணைத்தலைமை உரையின் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 'யாழ்;. மாவட்டமானது பொருளாதாரத்தின் மையப்பகுதியாக காணப்படுகின்றது. ஆகவே, யாழ். மாவட்டத்ததை மாகாணத்தில் மட்டுமல்ல, நாட்டின் முக்கிய மாவட்டமாக முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்கவேண்டும்.

நான் இந்த கூட்டத்தில் இணைத்தலைமையாக பங்குபற்றியபோதும் கட்சி பேதமாகவோ அல்லது அரசியல்வாதியாகவோ கலந்து கொள்ளவில்லை. மக்களின் நலன் சார்ந்து செயற்பாட்டாளனாகவே கலந்து கொண்டுள்ளேன். ஆகவே, நாம் இதில் தலைமை உரைகளை குறைத்து அபிவிருத்தி திட்டங்கள் தொடர்வில் பேசுவது பொருத்தமானதாக அமையும்.

எம்மக்களுக்காக பல பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக மீள்குடியேற்றம், வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதைபோன்று ஆறு மாத காலத்துக்குள் மீள்குடியேற்றம் இடம்பெறும். அதற்கான வேலைகள் இடம்பெறுகின்றன. அவ்வாறு குடியேறும் மக்களின் நலத்திட்டங்களை நாம் முன்னெடுக்கவேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X