2025 மே 16, வெள்ளிக்கிழமை

எதிர்ப்பு போராட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

மின் காற்றாலை எமக்கு வேண்டாம், எங்களை வாழவிடுங்கள் என, மக்கள் மறவன்புலவு மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு உட்ப்பட்ட மறவன்புலவு விவசாய கிராமத்தின் எல்லைப் பகுதியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி மின் காற்றாலை அமைப்பதற்கான ஆரம்ப வேலைகள் இடம்பெற்று வருகின்றன.
இத்திட்டம் தமது பகுதியில் அமைக்க வேண்டாம் என கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனாலும் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என இம்மக்களுக்கு பல தரப்புக்களாலும் வாக்குறுதி அளிக்கப்பட்டு வேலைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

ஆனாலும் மீண்டும் இடை நிறுத்தப்பட்டிருந்த வேலைகள் மீண்டும் இன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தமையால், மாலை 04 மணியளவில் ஒன்று கூடிய மக்கள். ஊர்வலமாகச் சென்று ஆரம்பிக்கப்பட்ட வேலைகளை நிறுத்தி உடனடியாக வெளியேறுமாறு கோசங்களை எழுப்பினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .