Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூலை 31 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாண மாநகர சபை பிரதி மேயரைக் கட்டி வைத்து, தன்னால் அடிக்க முடியாதென, யாழ்ப்பாண மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் இன்று (31) தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாநகர சபை அமர்வு, மாநகர சபை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது நடைபெற்ற விவாதம் ஒன்றில், எதிர்க்கட்சி உறுப்பினர் மணிவண்ணனை, விகிதாசார உறுப்பினர் என, பிரதி மேயர் விளித்தார்.
அதற்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்ததுடன், பிரதி மேயர், அவருடைய கருத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும், விகிதாசார உறுப்பினர் என ஒருவரைக் குறிப்பிட்டு கூறும் போது, இந்தச் சபையில் உள்ள 18 விகிதாசார உறுப்பினர்களையும் அது குறிக்கும் எனவும், சபை உறுப்பினர்களைக் கௌரவம் இன்றி பேச முடியாது எனவும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த மேயர், அந்தக் கருத்தை, அறிக்கையில் இருந்து நீக்கி விடுவதாக அறிவித்தார். அதற்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் உடன்படாததோடு “பிரதி மேயர் சபையில் எழுந்து, நான் அந்தக் கருத்தை வாபஸ் பெறுகிறேன் எனக் கூற வேண்டும்” எனத் தெரிவித்தார்கள்.
அதனையடுத்து மேயர், அக்கருத்தை வாபஸ் பெறுமாறு, பிரதி மேயரிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு பிரதி மேயர், தன்னுடைய கருத்தை வாபஸ் பெறப் போவதில்லையென, ஆணித்தரமாகக் கூறி அமர்ந்தார்.
அதைத் தொடர்ந்து, சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்துக் கருத்துத் தெரிவித்த மேயா'? “என்னால் என்ன செய்ய முடியும்? பிரதி மேயர், தன் கருத்தை வாபஸ் பெற முடியாது என கூறுகின்றார். கருத்தை வாபஸ் பெறுமாறு, அவரைக் கட்டி வைத்து அடிக்கவா முடியும்?” எனக் கேட்டார்.
அதனை அடுத்து, சபையில் கடுமையான எதிர்ப்பு எழுந்ததால், இறுதியில் பிரதி மேயர் எழுந்து, தனது கருத்தை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்தார்.
இதேவேளை, ஆளுங்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், விகிதாசார முறைமையில் தெரிவான உறுப்பினர்கள், எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காது, மௌனம் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago