Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
உள்நாட்டுப் போரின் போது தமிழ் மக்கள் தங்கள் உயிர்களை பாதுகாத்துக் கொள்வதுக்காக இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்ற எமது மக்களை ஏற்றிச் சென்ற மீனவர்களின் படகுகளை மீண்டும் எமது மீனவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என இந்தியத் துணைத் தூதுவர் பாலச்சந்திரனிடம் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இனப்பிரச்சணை காரணமாக தமது உயிர்களைப் பாதுகாப்பதுக்காக தமிழகத்துக்குச் சென்ற மக்களுக்குச் சொந்தமான 950 க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தடுத்து வைத்திருந்த படகுகளில் ஒரு தொகுதிப் படகுகள் 2010ஆம் ஆண்டளவில் ஏலத்தில் விற்பனையும் செய்யப்பட்டுள்ளது. அவை வருமானம் ஈட்டும் பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தப் படகுகளை நம்பி வாழ்ந்த மக்களில் பலர் தமிழகத்தில் இருந்து மீண்டும் நாட்டுக்குத் திரும்புகின்றனர். எனவே எமது மீனவர்களின் படகுகளை இலங்கைக்கு எடுத்து வந்து அவர்களிடமே ஒப்படைக்க ஆவண செய்ய வேண்டும்.
போருக்குப் பின்னர் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட வேளையில் கைது செய்யப்பட்ட சுமார் 200 றோலர் படகுகளை இலங்கை அரசு விடுவிக்கும் நிலையில், உள்ளுர் மீனவர்களின் நலன் கருதி ஈழ அகதிகளின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் எனக் கோரி நிற்கின்றேன்.
இந்தச் செயல்பாட்டுக்கு நிதிச் செலவுகளோ அல்லது அதிக நடைமுறைப் பிரச்சனைகளோ ஏற்பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் மிக விரைவில் குறித்த பணியை மேற்கொண்டு எமது மீனவர்களின் வாழ்வுக்கும் உறுதுணையளிக்க வேண்டும் எனக் கோருகின்றேன் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
2 hours ago
4 hours ago