Princiya Dixci / 2022 ஜூலை 09 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு (08) 08 மணியளவில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறியதில் ஒருவர் காயமடைந்த நிலையில் மற்றையவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியை சேர்ந்தவரே காயமடைந்த நிலையில் காரைநகர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago