2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் விடுதலை!

Freelancer   / 2023 மார்ச் 24 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 12ஆம் திகதி, இந்திய மீனவர்கள் நால்வர் எல்லை தாண்டி, இலங்கை - காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இதன்போது மீன்பிடிக்குப் பயன்படுத்திய படகு ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.

குறித்த மீனவர்களின் வழக்கு, ஊற்காவற்றுறை நீதிமன்றில் இன்று (24) எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நான்கு மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுவித்தத்து நீதிமன்றம்.

படகின் உரிமையாளரும் படகில் இருந்துள்ளமையால் படகு பறிமுதல் செய்யப்படுவதாக ஊற்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டது.  (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X