2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஏ.டி.எம் அட்டையைப் பாவித்து திருட்டு

செல்வநாயகம் கபிலன்   / 2017 செப்டெம்பர் 18 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அச்சுவேலிப் பகுதியில் தவறவிடப்பட்ட ஏ.டி.எம் அட்டையிலிருந்து 36,000 ரூபாய் திருட்டுப் போயுள்ளதாக, பாதிக்கப்பட்ட நபரினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் நேற்று (17) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நல்லூர் பகுதியைச் சேர்ந்த நபரே இந்த முறைப்பாட்டைச் பதிவு செய்துள்ளார்.

மேற்குறித்த நபர் அச்சுவேலிப் பகுதியில் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அதன்போது, தனது கைபையில் பணங்களுடன் சேர்த்து ஏ.டி.எம் அட்டையயையும் வைத்திருந்தாகக் கூறப்படுகிறது. அத்துடன் இரகசிய இலகத்தையும் குறித்தெடுத்து வைத்துள்ளார். திருடிய நபர்கள் கைப்பையில் இருந்த இரகசிய இலகத்ததை அறிந்துள்ளனர். மேலும் அச்சுவேலி நகரிலுள்ளஅரச வங்கியொன்றிலிருந்த ஏ.டி.எம் இயந்திரத்தின் மூலம் பணத்தைத் திருடியுள்ளதாக அறியப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .