2025 மே 21, புதன்கிழமை

ஒக்டோபரில் விசேட அமர்வு

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண மீள்குடியேற்றக் கொள்கை வரைபையும் மாகாணத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுடைய எதிர்காலம் குறித்த கொள்கை வரைபையும் ஆராய்ந்து, அவற்றை மாகாணத்தின் கொள்கை ஆவணமாக மாற்றும் முகமாக, விசேட அமர்வொன்றை கூட்டவுள்ளதாக, அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். 

இதற்கமைய, இந்த அமர்வு, ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இடம்பெறுமெனவும், அவர் கூறினார். 

வடக்கு மாகாண சபையின் 131ஆவது அமர்வு, பேரவைச் செயலகத்தின் சபா மண்டபத்தில், நேற்று  (11) நடைபெற்றது. 

இதன்போது, மேற்படி விடயத்தை சபையில் முன்வைத்து, மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் போதே, அவைத் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X