2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘ஒத்துழைத்தால் 2ஆவது அலையை முறியடிக்கலாம்’

Editorial   / 2020 ஜூலை 13 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்

இரண்டாவது  கொரோனா அலையை வெற்றிகரமாக முறியடிப்பதற்கு, அனைத்து பொதுமக்களும்  சுகாதார திணைக்களத்தினருக்கு ஒத்துழைக்க வேண்டுமென, யாழ். மாவட்டச் செயலாளர் க. மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் அபாயம் மீண்டும் ஏற்பட்டுள்ளதை அடுத்து, யாழ்ப்பாணத்தின்  நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாண குடாநாட்டில்  மொத்தமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்களெனவும் யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் செயற்பாடானது சுகாதார திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்களால் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

தற்பொழுது இது, சமூகதொற்றாக உருவாகக் கூடிய அபாயம் காணப்படுவதாக உணரப்படுகின்றதெனத் தெரிவித்த அவர், இந்தக் கட்டத்தில்  இரண்டாவது அலையாக அதாவது முன்னரோடு ஒப்பிடும்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று கூடுதலாகவே காணப்படுகின்றதெனவும் கூறினார்.

எனவே, யாழ் குடாநாட்டில் உள்ள அனைத்து பொதுமக்களும் மிகவும் விழிப்பாக இருந்து, இந்த நிலைமையைச் சமாளிப்பதற்கு, தமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும், மாவட்டச் செயலாளர் வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X