2025 மே 21, புதன்கிழமை

ஓட்டுத்தொழிற்சாலையைக் புனரமைக்க நிதி கிடைக்கப்பெற்றுள்ளது

Editorial   / 2018 ஜூலை 19 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியில், நீண்ட காலமாகச் செயலிழந்து காணப்படும் ஓட்டுத்தொழிற்சாலையைப் புனரமைப்பதற்கு, மீள்குடியேற்ற அமைச்சினூடாக 35 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாக, மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

எமது மாவட்டத்தில், நீண்ட காலமாக பாவனைக்குப் பயன்படுத்தப்படாது, கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற  ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையைப் புனரமைப்பதற்கு, ஒட்டுசுட்டானின் உள்ள சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்கம் விண்ணப்பத்தை மேற்கொண்டிருந்ததாகத் தெரிவித்த அவர், அதனடிப்படையில், தற்போது மீள்குடியேற்ற அமைச்சினூடாக 35 மில்லியன் ரூபாய் நிதி எமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அந்நிதி ஊடாக, அதனை மீளவும் புனரமைத்து  செயற்படுத்தமுடியுமென்று நம்புவதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .