2025 மே 05, திங்கட்கிழமை

ஓமானில் தவிக்கும் 3 இலங்கைப் பெண்கள்

Freelancer   / 2022 நவம்பர் 05 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகலில் உள்ள முகவர் ஒருவர் மூலம் ஓமான் நாட்டிற்கு பணிப்பெண் வேலைக்கு சென்ற 3 பெண்களை ஓமான் நாட்டில் தடுத்து வைத்திருப்பதாகவும், வேலைக்கு அனுப்பாமல் சாப்பாட்டிற்கு எவ்விதமான வசதியும் செய்து கொடுக்காமல் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர் க.சந்திரிக்கா புஸ்பகுமாரி இன்று யாழ். ஊடக அமையத்தில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இது தொடர்பில் கடந்த 10ஆம் மாதம் 18 ம் திகதி பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்ததாகவும், பொலிஸார் ஒரு மாத தவணையில் தீர்வு பெற்றுத்தருவதாகவும் உறுதி அளித்தனர்.

எனினும் பொலிஸார் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் அதனால் தான் ஊடகங்களுக்கு தகவலை வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.

குருநாகல் பாணகம பகுதியில் இருக்கின்ற முகமது நலீம் என்ற முகவர் மூலம் அனுப்பப்பட்ட பெண்களை திருப்பி நாட்டிற்கு அழைக்குமாறு கேட்டபோது முகவரோ 5 இலட்சம் பணம் தந்தால் மாத்திரம் திருப்பி நாட்டிற்கு அழைக்கலாம் என தெரிவித்ததாகவும் உறவினர் க.சந்திரிக்கா புஸ்பகுமாரி  தெரிவித்திருந்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X