2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கூட்டம் முடிவுறுவதற்குள் வெறிசோடிப்போன இருக்கைகள்

Niroshini   / 2016 ஜனவரி 31 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் முடிவடைவதற்குள், மக்களின் பிரதிநிதிகளின் இருக்கைகள் இடைவெளியாகியது.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சனிக்கிழமை (30) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு வடக்கு மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், யாழ். மாவட்ட பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் என அனைத்து தரப்பினர்களுக்கும் ஆசன ஒதுக்கீடு காணப்பட்ட போதிலும், அரச அதிகாரிகளின் ஆசனங்கள் மட்டுமே நிறைந்திருந்தது.

மக்கள் பிரதிநிதிகள் சிலரின் வருகையால் ஒரு சில ஆசனங்களை தவிர ஏனைய ஆசனங்கள் வெற்றிடங்களாக காணப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், ஈ.சரவணபவன், வட மாகாண சபையின் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா,  வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான பரஞ்சோதி, ப.கஜதீபன், கே.சயந்தன், இ.ஆனோல்ட், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், ச.சுகிர்தன், எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்த போதிலும், கூட்டம் முடிவில் சிவாஜிலிங்கம் மட்டுமே சபையில் இருந்தார்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் வருகை தந்த மக்கள் பிரதிநிதிகளின் ஆசனங்களும் இறுதியில் காலியாகவே இருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X