Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 01 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தேவையென பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சிக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளர், கிளிநொச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் சனிக்கிழமை (31) மாலை நடத்திய ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடமாகாணத்தில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன. குறிப்பாக கொலைச்சம்பவங்கள், வன்புணர்வுகள் போன்ற குற்றச்செயல்;கள் குறைவடைந்து காணப்படுகின்றன.
இதேவேளை, 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில், 391 படுகொலை சம்பவங்கள் பதிவாகியிருந்;தன. 2015 ஆம் ஆண்;டு அதே காலப்பகுதியில் 336 படுகொலைகள் பதிவாகியிருக்கின்றன.
இவ்வாறு வருடாந்தம், பாரிய குற்றச்;செயல்கள் குறைவடைந்து வருகின்றன.
அத்துடன், போதைப்பொருள் பயன்பாடு வடபகுதியில் அதிகமாக காணப்படுகின்றது. இதுவரை 300 கிலோகிராம் வரையான கஞ்சா போதைப்பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தியாவில் இருந்;து கடல் மார்க்கமாக இவ்வாறான போதைப்பொருட்கள் இலங்கைக்கு எடுத்து வரப்;படுகின்றன.
குறிப்பாக காங்கேசன்துறை, பருத்தித்துறை பகுதிகளில் இவ்வாறு எடுத்துவரப்;படுகின்றன. போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றச்செயல்களை குறைப்பதற்கு நாட்டில் உள்ள அனைத்;து தரப்புக்களினதும் ஒத்துழைப்;புக்கள் கிடைத்துள்ளன.
தொடர்ந்தும் அனைவரினதும் ஒத்துழைப்புக்;கள் மூலமே நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுக்கமுடியும் என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago