2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கசிப்பு உற்பத்தி அதிகரிப்பு

George   / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், அச்செழு கிராமத்தின் ஒரு பகுதியில் கசிப்பு உற்பத்தி தாராளமாக நடைபெறுவதாக பொது அமைப்புக்கள் குற்றம்சாட்டுகின்றன.

அத்துடன், இவற்றை கட்டுப்படுத்துவதில் பொலிஸார் அசமந்த போக்குடன் செயற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கசிப்பு உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதுடன், அவற்றை வெளியில் எடுத்து செல்வதனை அவதானிக்க கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நடவடிக்கையினால் குடும்ப வன்முறைகள், குழு மோதல்கள் அதிகரித்துள்ளதுடன், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

“ஆரம்பத்தில், அச்செழு பகுதியில் கசிப்பு உற்பத்தி கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க ​வேண்டும்”  என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .