2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கச்சதீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

Editorial   / 2019 ஜனவரி 23 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

கச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம், 16 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என யாழ் மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார்.

புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவகால நிலைமைகள் பற்றிய உயர் மட்டக்கலந்துரையாடல் நேற்று (22) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட செயலர் தலைமையில்  நடைபெற்றது.

இக் கூட்டத்தில் யாழ். மாவட்ட மேலதிக செயலர் சுகுணரதி தெய்வேந்திரம், மற்றும் யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம், கடற்படையின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர், நெடுந்தீவு பிரதேச அருட் சகோதரர் எ.எமி போல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இம்முறை கடந்த வருடங்களை போல் 20 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் இம்முறை இந்தியாவில் இருந்தும் அதிகளவான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே பக்தர்களுகள் இளைப்பாறுவதற்கு நிழற் கூடராங்கள் 70, மற்றும் குடிநீர் தாங்கிகள் 150, மலசகூட வசதிகள் என்பன கடற்படையினர், மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலகம், பிரதேச சபையினரின் ஒத்துழைப்பில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பக்தர்களுக்கு பல நன்மைகளை தரக்கூடியவகையில் இதர செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவான் வரையான போக்குவரத்து சேவையினை இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்;கள் மற்றும் இதர போக்குவரத்து சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் படகு சேவைகளும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X