2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கஞ்சா சுருட்டுடன் கைதானவர்களுக்கு விளக்கமறியல்

Niroshini   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறை குடத்தனை பகுதியில் கஞ்சா சுருட்டுடன் கைதான இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் ஞாயிற்றுக்கிழமை (20) உத்தரவிட்டுள்ளார்.

குடத்தனை பகுதியில் இருவர் கஞ்சா சுருட்டுகளை வைத்து விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சனிக்கிழமை (19) ஸ்தலத்துக்கு விரைந்த  பொலிஸார், அல்வாய் மற்றும் குடத்தனை பகுதியினை சேர்ந்த 25, 34 வயதுடைய இருவரையும் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 8 கஞ்சா கலந்த சுருட்டினையும் மீட்டனர்.

கைதான சந்தேக நபர்களை பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய போது, நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .