2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சாவுடன் இருவர் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

யாழ். தீவகம், புங்குடுதீவு பகுதியில் 16 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர், இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்றுறைப் பொலிஸார் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவர் மன்னார் - பேசாலை பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றவர் வவுனியா - செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும், இன்று காலை, கஞ்சாவைக் கடத்திச் செல்ல முற்பட்டபோது, புங்குடுதீவு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் வைத்து கடற்படையின் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களின் உடைமையில் இருந்து 16 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதன் பெறுமதி 40 இலட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஊர்காவற்றுறைப் பொலிஸார், சந்தேகநபர்களை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X