2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

“கடற்தொழில் அமைச்சரே கண்ணை திறந்துபார்”

Editorial   / 2024 ஜூன் 18 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

இலங்கை கடற்பரப்பிற்கள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய துணைத் தூதரகம் முன்பாக  மீனவர்கள் போராட்டமொன்றை, செவ்வாய்க்கிழமை (19)  முன்னெடுத்திருந்தனர்.

“இந்திய அரசே எமது கடல் வளத்தினை சூறையாடாதே”, “எம்மையும் வாழவிடுங்கள்” என கோரி யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சக்கு சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம். சென் பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மருதடிச் சந்தியில் இருந்து துணைத் தூதரகம் வரை பேரணியாகச் சென்று தூதரகம் முன்பாக கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 “ இலங்கை கடற்படையே நிறுத்து நிறுத்து”, “அத்துமீறலை தடுத்து நிறுத்து”, “கடற்தொழில் அமைச்சர் கண்ணை திறந்துபார்”, “இந்திய அரசே எம்மையும் வாழ விடு”, “சிறிலங்கா காவல்துறையே எங்களை தடுக்காதே” உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து தங்களது கோரிக்கைள் அடங்கிய மகஜரொன்றை மீனவர் சங்கப் பிரதிகள், துணைத்தூதரகத்தில் கையளித்தனர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X