Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூன் 26 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணல்காடு பகுதியில் இருந்து அதிகாலை கட்டுமரத்தில் கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் இதுவரை கரை சேரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான அ.ஆனதாஸ் (38 வயது) என்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குறித்த மீனவர் வியாழக்கிழமை (26) அதிகாலை மீன்பிடித் தொழிலுக்காக சென்றுள்ளதுடன் வழமையாக 9.00 மணியளவில் கரை சேரும் இவர் இதுவரை திரும்பி வராத நிலையில் உறவினர்கள் படகில் தேடிச் சென்ற வேளை, அவர் பயணித்த கட்டுமரம் கடலில் மிதந்து வந்துள்ளது.
மணல்காடு மீனவர்கள் தற்போது தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றதுடன் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்
6 minute ago
6 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
6 minute ago
28 minute ago