Niroshini / 2021 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - பண்ணை கடலில் தவறி விழுந்து காணாமல் போன இளைஞன், இன்றைய தினம் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி.கௌதமன் (வயது 31) எனும் இளைஞனே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பண்ணை பாலத்தடியில், நேற்றைய தினம் மாலை, குறித்த இளைஞன் தனது நண்பர்களுடன் பொழுதை கழித்துக்கொண்டு இருந்த வேளை தவறி விழுந்துள்ளார்.
தவறி விழுந்தவரை பாலத்தின் கீழான நீரோட்டம் அடித்து சென்றிருந்த நிலையில், நேற்றைய தினம் சுமார் 2 மணி நேரங்களுக்கு மேலாக கடற்படையினர் தேடுதல் நடாத்தி இருந்தனர்.
இந்நிலையில் பண்ணை பகுதியிலிருந்து, இன்றைய தினம் காலை, குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .