Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
தீவகப் பகுதியில், கடல் உணவு உற்பத்தி சார் தொழிற்றுறைகளைக் கட்டியெழுப்பி, அதனூடாக கடலுணவு உற்பத்தியின் கேந்திர நிலையமாக தீவகப் பகுதி மாற்றியமைக்கப்படுமென, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில், நீரியல் வள மூலங்கள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
காரைநகர் சீனோர் நிறுவனத்துக்கு, நேற்று (21) சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அத்துறைசார் பொதுமக்களுடன் கலந்துரையாடிய போதே, இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தீவகப் பிரதேசத்தில், கடல் வளத்தைக் கொண்டு, பல்வேறுபட்ட தொழிற்றுறைகளை மய்யப்படுத்திய விசேட திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதன்பிரகாரம், காரைநகர் சீனோர் நிறுவனத்தை மய்யப்படுத்தியதாக இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கமைய, இப்பகுதியில், எரிபொருள் நிரப்பு நிலையம், ஐஸ் தொழிற்சாலை, படகு கட்டுமாணம், போக்குவரத்துக்கான இறங்குதுறை மீளமைத்தல், நேரடி மீன் விற்பனைக்கான சந்தை வசதி உள்ளிட்ட துறைகளை ஒன்றிணைத்து இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், அவர் கூறினார்.
இதனூடாக, தீவகப் பகுதியை, ஒரு கடலுணவு உற்பத்தியின் கேந்திர நிலையமாகவும் உருவாக்கிக் கொள்ள முடியுமுடியுமெனவும், அவர் தெரிவித்தார்.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago