2025 மே 09, வெள்ளிக்கிழமை

கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றியோர் குருநகரில் தங்கவைக்கப்பட்டிருக்கவில்லை

Niroshini   / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இருவரும், பாசையூர் மேற்கு பகுதியில் உள்ள அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான வளாகத்தில், ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனரெனத் தெரிவித்த அதிகாரிகள், அவர்கள் குருநகரில் தங்கவைக்கப்பட்டிருக்கவில்லை என்றும் கூறினர்.

குருநகர், பருத்தித்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவ்விருவரும், பேலியகொடவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கும் திரும்பியதும், கடலுணவு நிறுவனத்துக்குச் சொந்தமான பாசையூர் மேற்கில் உள்ள இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். அதனால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கூலர் வாகனத்தில் சென்று வந்த இவ்விருவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு கோரோனா தொற்றுள்ளமை திங்கட்கிழமை (26) உறுதிசெய்யப்பட்மை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X