2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கண்டாவளையில் காட்டு யானை அச்சுறுத்தல்

Freelancer   / 2023 பெப்ரவரி 26 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் பிரதேத்தில் தொடரும் காட்டு யானை அச்சுறுத்தல் காரணமாக தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதி மக்கள் குடியிருப்புக்குள் தினமும்  காட்டு யானை புகுந்து மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருவதுடன், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும்  வீட்டு தளபாடம் மற்றும் வீடு ஒன்றின் கூரை என்பனவத்தை அடித்து உடைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

வாழ்வாதாரத்துக்காக வைக்கப்பட்ட 24 தென்னைமரங்கள் 1/2 ஏக்கர் வாழைச்செய்கை என்பவற்றை இவ்வாறு அழிந்துள்ளன. 

இச்சம்பவம் தொடர்பாக இப்பகுதி கல்மடுநகர் கிராம அலுவலருக்கு தெரிவித்திருந்த போதிலும் சம்பவ இடத்துக்கு இதுவரை வரவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

தமது பகுதிகளில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்த வண்ணம் உள்ளதாகவும் இது தொடர்பாக எந்தவோர் அதிகாரரிகளுமே கவனத்தில் கொள்ளவில்லை அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

எனவே, இது தொடர்பாக வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் எமது பகுதி கிராம  அலுவர் சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் எமது தற்காலிக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எமக்கான யானை வெடியை தந்து உதவுமாறும் விரைவில் நிரந்தர தீர்வைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X