2025 ஜூலை 05, சனிக்கிழமை

கத்தி முனையில் கைபேசியை பறித்தவர் கைது

Kanagaraj   / 2015 நவம்பர் 05 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

நடந்து சென்ற நபர் ஒருவரின் கைபேசியினை கத்திமுனையில் பறித்தெடுத்து சென்ற நபரை மோட்டார் சைக்கிள் இலக்கத்தின் உதவியுடன் சுன்னாகம் பொலிஸார், புதன்கிழமை (04) இரவு கைது செய்துள்ளனர்.

இச் சம்பவத்தில் உடுவில் ஏ.ஜீ ஒபிஸ் லேன் பகுதியினை சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (03) இரவு 8:30 மணியளவில் இணுவில் பேருந்து நிலையத்திலிருந்து குறித்த நபர் கைபேசியில் உரையாடியவாறு வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.

குறித்த நபரை பின் தொடர்ந்து இரு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் ஆட்கள் நடமாட்டம் அற்ற இடத்தில் வைத்து அச்சுறுத்தியுள்ளனர். அத்துடன் இடுப்பில் இருந்த கத்தியினை காட்டி அச்சுறுத்தி பெறுமதிமிக்க கைபேசியினை பறித்து சென்றிருந்தனர்.

கைபேசியினை கொடுத்த நபர் மோட்டார் சைக்கிள் இலக்கத்தினை குறித்தெடுத்து இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்ட இரகசிய பொலிஸார் மோட்டார் சைக்கிள் உரிமையாளரை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .