Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஜூன் 12 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராஜன் ஹரன், ரொமேஸ் மதுசங்க
கதிர்காமம் புனித பாதயாத்திரை, உகந்தை முருகன் ஆலயப்பகுதியில் இருந்து ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக, ஆலய செயலாளர் ஸ்ரீ பஞ்சாச்சரம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணம் - செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து சுமார் 600 கிலோமீற்றர் துரத்தை கிழக்கு கரையோரமாக பாத யாத்திரையாகக் கடப்பதற்கு சுமார் இரண்டு மாதங்கள் எடுக்கின்றன.
“இதில் வனப்பகுதி பாதயாத்திரை ஆரம்பமாகும் இடமான உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் மாத்திரம், சுமார் ஒரு வார காலம் யாத்திரிகர்கள் தங்கியிருப்பர். இவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மலசலகூடம், மருத்துவம், பாதுகாப்பு, போக்குவரத்து, தங்குமிடம் போன்ற வசதிகளை வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன.
“இதேவேளை, குமண வன வழிப்பதை திறக்கப்படும் திகதி, இந்த வாரம் இடம்பெறவுள்ள அரச உயர்மடட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
17 minute ago
53 minute ago
58 minute ago