2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கப்பல் சேவை மூலம் வடமாகாணத்தை முன்னேற்ற முடியும்

Freelancer   / 2023 ஜனவரி 06 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

 கப்பல் சேவை மூலம் வடமாகாண பொருளாதாரத்தை முன்னேறக் கூடிய சாத்தியம் இருப்பதாக யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைவர் இரத்தினலிங்கம் ஜெயசேகரன் தெரிவித்தார். நேற்று (05) யாழ். வணிகர் கழகத்தில் நடைபெற்ற  ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ‘காகோ சிப்’ கப்பல் சேவை ஜனவரி மாதம் இறுதியில் ஆரம்பிக்கப்படும். நீண்டகாலமாக வணிகர் கழகம் இக் ‘காகோ சிப்’ கப்பல் சேவையை கேட்டதன் தொடர்சியாக, இந்திய - இலங்கை அரசாங்கங்கள் தற்போது இணங்கி, இந்தச் சேவையை முன்னெடுக்கவுள்ளன. 

இதன்மூலம்,  யாழ்ப்பாண வர்த்தகர்கள், இந்தியாவில் இருந்து பொருட்களை காங்கேசன்துறை வழியாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடலாம். இந்தச் சந்தர்ப்பத்தை தயவுசெய்து ஒவ்வொருவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள் என்றும் வேண்டுகோள்விடுத்தார்.
இந்திய ரூபாயில் இறக்குமதிகள் செய்வது தொடர்பாக, வங்கி அதிகாரிகளுடன் அரசு அதிகாரியுடன் தொடர்பு கொண்டு எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X