2025 மே 01, வியாழக்கிழமை

‘கருணாதான் விரும்புகிறார்: கூட்டமைப்பு தீர்மானிக்கவில்லை’

Gavitha   / 2021 ஜனவரி 04 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவை, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைப்பது என்பது, சாத்தியப்படாத ஒரு விடயம் என்று வட மாகாண சபை அவைத் தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்று (03) கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த  விநாயகமூர்த்தி முரளிதரன், தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கருணா, கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட விரும்புவதாக தெரிவித்தாரே தவிர, கூட்டமைப்பு அவரை இணைத்துக் கொள்ளுவது தொடர்பாக, எந்த ஒரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவரை கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என்றும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .