2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

கர்ப்பிணி பெண் கொலை: பிரதான சந்தேக நபர் கைது

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 02 , பி.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செந்தூரன் பிரதீபன்

ஊர்காவற்துறை பிரதேசத்தை நடுங்க வைத்த கர்ப்பிணி பெண் கொலை சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2017ஆம் ஆண்டு கரம்பன் பகுதியில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து இருந்தனர்.

பிரதான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு இருக்கவில்லை. இந்நிலையில் நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தின் முற்படுத்தியபோது அவரை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவினை ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் ஜெ. கஜநிதிபாலன் பிறப்பித்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஊர்காவற்துறை கரம்பன் பகுதியில் ஞானேஸ்வரன் ரம்சிகா என்ற நான்கு மாத கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டிருந்தார். 

இந்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரினால்  இருவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை இடம்பெற்று வருகின்றது. 

இந்நிலையில் குறித்த பெண்ணின் கணவருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்புக்களை மையமாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தது. இதன போது சந்தேக நபர்களின் தொலைபேசி தகவலின் அடிப்படையில் நெடுந்தீவு பகுதியை சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கொலை இடம்பெற்ற தினம் சந்தே நபர்கள் கணவருக்கு அலைபேசியை எடுத்ததுடன் மனைவி தனிமையில் இருக்கும் பொழுது அவருடைய வீட்டுக்கு சென்று நகைகளை கொள்ளையடித்துடன் குறித்த பெண்ணையும் கொலை செய்திருந்தனர்.

மேலும் ஒரு நபர் ஒரு குற்ற வழக்கில் நீதிமன்றம் உத்தரவுக்கு அமைய சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். சிறைவாசம் அனுபவித்து வரும் குற்றவாளியிடம் இந்த கொலை சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கும் ஊர்காவற்துறை நீதவான் இன்று அனுமதி வழங்கினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .