Freelancer / 2022 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் இருந்து விலகி பிறிதொரு பாடசாலையில் சேர்வதற்கான இடைவிலகல் விண்ணப்பம் தனக்கு உரிய முறையில் தரவில்லை என மாணவி ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்பின் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மாணவி மற்றும் தாய் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.
மாணவியின் தாய் தெரிவிக்கும் போது, குறித்த தனியார் பாடசாலையில் தனது பிள்ளையை மனரீதியாக பாதிக்கும் வகையில் பல செயற்பாடுகள் இடம்பெற்றதை எனது பிள்ளை என்னிடம் தெரிவித்தார்.
அதன் காரணமாக குறித்த பாடசாலையில் கல்வி கற்பதில் எனது பிள்ளைக்கும் விருப்பமின்மை காரணமாக இடைவிலகல் படிவத்தை தருமாறு பாடசாலை அதிபரிடம் கோரிக்கை விடுத்தேன்.
நான் கொழும்பில் கல்வியை தொடர போவதாக தெரிவித்த நிலையில் அவர்கள் இடை விலகல் விண்ணப்பத்தை தருவதற்கு இழுத்தடித்தார்கள் என்றார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .