2025 ஜூலை 23, புதன்கிழமை

கல்விக்கு அதிக நிதி

George   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கே அதிகூடிய நிதியாக 10 ஆயிரத்து 779 மில்லியன் ரூபாய் (10,779.131 மில்லியன்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான விவாதம், வியாழக்கிழமை (17) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நடைபெற்றது.

கல்வி அமைச்சின் மீண்டெழும் செலவீனத்துக்காக 9,297.631 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரமாண அடிப்படையிலான நிதிக்கொடைக்கு 16.5 மில்லியன் ரூபாயும் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதிக்கொடைக்காக 1,000 மில்லியன் ரூபாயும், கல்விசார் அபிவிருத்தித் திட்டத்துக்கு 465 மில்லியன் ரூபாய் என மூலதனச் செலவினமாக 1,481.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .