2025 ஜூலை 23, புதன்கிழமை

கல்வி வளர்ச்சிக்கு 16 செயற்றிட்டங்கள்

George   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.ஜெகநாதன்

வடமாகாணத்தின் கல்வித் துறையில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் 16 செயற்றிட்டங்களை எதிர்வரும் 2016ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தவுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான விவாதம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (17) நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

'தரம் 5 பரீட்சையில் தோற்றுகின்ற அனைத்து மாணவர்களும் 70 புள்ளிகளைப் பெறச் செய்தல், க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றுகின்ற அனைத்து மாணவர்களும் 2 திறமைச்சித்தி அடங்கலாக 6 பாடங்களில் சித்தியடைய வைத்தல், க.பொ.த உயர்தரத்தில் 40 வீதமான மாணவர்கள் விஞ்ஞானப் பிரிவிலும், தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் கலைப்பிரிவில் தலா 20 வீதமான மாணவர்கள் கல்வி கற்பதை உறுதிப்படுத்தல், வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கு தண்டனை வழங்கும் முறையை இல்லாது ஒழித்தல், மாணவர் இடை விலகை குறைத்தல் உள்ளிட்ட 17 செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .