2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

கலந்துரையாடல்

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில், யாழ்ப்பாணம் மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தின் தற்கால அரசியல் நிலைமை மற்றும் மீள்குடியேற்ற பிரதேசங்கள் தொடர்பாகவும் யாழ். மாவட்ட சர்வமதப் பேரவையின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்கின்ற கலந்துரையாடல், இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 

தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில்  சமாதானப் பேரவையின் செயற்பாட்டுக்கு நிதியுதவி செய்கின்ற ஜேர்மன் நாட்டின் மிசேறியோர் அமைப்பு பிரதிநிதிகள், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன், வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், யாழ். மாநகர சபை முதல்வர் இ.ஆர்னோல்ட், வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன், மாநகர சபை உறுப்பினர் திருமதி இராகினி உட்பட பலர் கலந்துகொண்டனர். 

இதன்போது மீள்குடியேற்ற நிலைவரம், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக அரசியல் தலைவர்களால் ஜேர்மன் குழுவினருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .