2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

’கல்வித் தரத்தை முன்னோக்கி கொண்டு வரவேண்டும்’

Editorial   / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

பின்தங்கியுள்ள வடக்கு மாகாணத்தின் கல்வித் தரத்தை முன்னோக்கி கொண்டு வருவதற்கு கல்வியலாளர்கள் அனைவரும் முன்வர வேண்டுமென, வடக்கு மாகாண விளையாட்டு, கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண பிராந்திய நிலையத்தின் சான்றிதழ் வழங்கும் வைபவம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில், நேற்று நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையைப் பொறுத்த வரைக்கும் கல்வி என்ற ஒன்றுதான் அபிவிருத்திக்கான ஒரு சாவியாக காணப்படுகின்றது. இலங்கையானது  அதிக சனத்தொகையாக இளம் வயதினரை கொண்ட நாடாக காணப்படுகின்றது. எனவே, இந்தக் கல்வியை நாம் முன்னோக்கி கொண்டு வருவதன் மூலமே அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .