2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கல்வியமைச்சருக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவு அழைப்பு

Editorial   / 2018 ஜூன் 07 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரனை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்புப்பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

வவுனியா ஈரப்பெரிய குளம் பாடசாலையில் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வில், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் இலங்கைத் தேசியக் கொடியை ஏற்றாமை தொடர்பாக விசாரணை மேற்கொள்வதுக்காகவே பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி இந்த விசாரணை கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப்பிரிவின் தலைமையகத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .