2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

கழிவுப்பொருட்களை அனுமதியின்றி கொண்டு செல்ல முடியாது

Editorial   / 2018 ஜனவரி 01 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

“நல்லூர் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கழிவுப்பொருட்களை அனுமதியின்றி கொண்டுச் செல்லல், கொட்டுதல் ஆகியன பொதுச் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு தடைசெய்யப்பட்டுள்ளது” என, நல்லூர் பிரதேசசபை செயலாளர் சு.சுதர்ஜன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில், அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“இதனைமீறிச் செயற்படுவோர் மீது பிரதேசசபை சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டம் போன்றவற்றின் பிரகாரம் சட்டநடிவடிக்கை எடுக்கப்படும். அரச திணைக்களங்கள், பாடசாலைகள், விடுதிகள், வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகளில் அகற்ற முடியாதுள்ள கழிவுகளை, தங்கள் பகுதிக்குரிய உபஅலுவலகங்களில் கட்டணம் செலுத்தி கழிவகற்றல் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

“மேலும், கழிவுப்பொருட்களில் பிளாஸ்ரிக், கண்ணாடி, உக்காத பொருட்கள் போன்றவற்றை வேறுபடுத்தி சபையின் உதவியுடனும் உக்கும் கழிவுகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ளுதல் வேண்டும். 

“அத்தடன், அபிவிருத்தி செய்யப்படாத காணிகளில் உள்ள பற்றைகள் துப்பரவு செய்யப்பட வேண்டும். தவறின் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உணவு கையாளும் நிலையப் பணியாளர்கள் மருத்துவப்பரிசோதனை மேற்கொண்டு அனுமதி பெற்றிருத்தல் வேண்டும்.

“இதேவேளை, பொதுமக்கள் மற்றும் வியாபார நிலையங்கள், அரச தனியார் நிறுவனங்கள் தமது விசேட நிகழ்வுக்கு குடிநீர் தேவைப்படின், பிரதேசசபையில் கட்டணம் செலுத்தி, குடிநீரைப் பெற்றுக் கொள்ள முடியம். பொதுமக்கள் மற்றும் வியாபார நிலையங்கள், அரச தனியார் நிறுவனங்கள் தமது தேவையின் பொருட்டு, உழவு இயந்திரம் உருளை பக்கோ சேவையைப் பெறுவதற்கு பிரதேசசபையின் உபஅலுவலகங்களில் கட்டணம் செலுத்தி சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும். 

“பொதுமக்கள் தமது கால்நடைகளை கட்டி வைத்து வளர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மீறும் சந்தர்ப்பத்தில் பிரதேசசபையால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X