Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 01 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
"காணாமல்போனவர்கள் அலுவலக விசாரணைகள் நிறைவடையும் வரையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமையானது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான
இழப்பீடாக அமையாது. அது இடைக்கால நிவாரணம் மட்டுமே. அதுவும் மக்களுடைய கோரிக்கையின் நிமித்தமே வழங்கப்படவுள்ளது" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடக பேச்சாளருமான
எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலமைகள் குறித்து பருத்தித்துறையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இன்ற்ய் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுமந்திரனிடம் காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இடை க்கால நிவாரணம் வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாகுமாஎன ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், "இந்த விடயம் தொடர்பாக சிலர் எங்களோடு பேசினார்கள். காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகம் அமைத்த பின்னர் அந்த அலுவலகம் பல இடங்களில் கூட்டங்களை நடாத்தியுள்ளது. இதில் பல மக்கள் கலந்து கொண்டுள்ளனர். பலர் கடுமையாக எதிர்த்துள்ளனர். கூட்டங்களில் கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விசாரணைகளை நடாத்தி தமது உறவினர்கள் தொடர்பான உண்மை நிலை வெளிப்படுத்தப்படவேண்டும். எனக் கேட்டுள்ளதுடன் விசாரணைகள் நிறைவடையும் வரையில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ள தமக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும் எனக் கேட்டுள்ளார்கள்.
அதற்கமையவே இடைக்கால நிவாரணம் ஒன்றை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே இடைக்கால நிவாரணம் என்பது காணாமல்போனவர்களுக்கான இழப்பீடாக அமையாது. இடைக்கால நிவாரணம் வழங்கப்படும்போதும் காணாமல்
ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உரிய விசாரணைகள் நடாத்தப்படும். அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்களுக்கும் இடமில்லை" என்றார்.
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025