Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சியில், மாகாண காணித் திணைக்களத்துக்கென சொந்தமான காணிகள் பல ஏக்கரில் காணப்பட்ட போதும், அங்கு மாகாண திணைக்களத்தை அமைப்பதற்கு ஒரு துண்டு காணியை கூட வழங்க இதுவரை யாரும் முன்வரவில்லையென, மாகாண காணி ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில், தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
கிளிநொச்சி மாவட்டத்தில், அதிகளவான காணிப் பிணக்குகள் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், மாகாண காணித் திணைக்களத்தை, கிளிநொச்சி மாவட்டத்துக்குக் கொண்டு வருவதற்கு சகல தரப்பினரும் அனுமதித்துள்ளதாகவும் இருந்தபோதும் அதற்கான காணி இன்னமும் கிடைக்கப்பெறவில்லையெனவும் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகம் அமைந்துள்ள காணி கூட, மாகாண காணித் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியெனவும் மாகாண காணித் திணைக்களத்துக்குச் சொந்தமான முப்பது ஏக்கர் வரையான காணிகள் இவ்வாறு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், எமது அலுவலகத்தை அமைப்பதற்கு நான்கு பரப்புக் காணியை கூட பெற முடியாமல் உள்ளதாகத் தெரிவித்த அவர்,
இங்கு மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கம் என பிரித்து பார்க்காமல் எமது திணைக்களத்துக்குக் காணியை ஒதுக்கி தரவேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், பழைய கிளிநொச்சி மாவட்டச் செயலக அமைந்துள்ள காணியும் மேலதிக மாவட்டச் செயலாளரினது விடுதி அமைந்துள்ள காணியும் மாகாணக் காணித் திணைக்களத்துக்குச் சொந்தமானதெனக் குறிப்பிட்ட அவர், இவ்வாறு எமது காணிகள் எந்தவித அனுமதிகளும் இன்றி பிடிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதேவேளை, மாகாணத் திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகள் நகரில் உள்ளபோதும், இங்கிருந்து நான்கு கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் உள்ள காணியை தருவதாக, சம்பந்தப்பட்டோர் தெரிவிப்பதாக, அவர் மேலும் கூறினார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
30 minute ago
31 minute ago