2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

காணி சுவீகரிப்பு; நில அளவைக்கு எதிராக போராட்டம்

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

இராணுவத்தினரின் தேவைக்காக சுமார் 40 ஏக்கர் காணியை, யாழ்ப்பாணம், மிருசுவில் பகுதியில் சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யும் நடவடிக்கையை எதிர்த்து, காணி உரிமையாளர் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து, இன்று (05) போராட்டம் நடத்தினர்.

தற்போது 52ஆவது படையணியின் தலைமையகம் அமைந்துள்ள அக்காணியை சுவீகரித்து, நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்காக நில அளவை மேற்கொள்வதற்காக அளவையாளர்கள், இன்று காலை அங்கு வருகை தந்தனர்.https://endpoint1.adstudio.cloud/?t=check&uniq=4361c8c46dd924411216f768b73bd35d&u=www.seithi.lk

இதனையடுத்து, நில அளவைக்கு  எதிராக அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் காரணமாக யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை போக்குவரத்தும் தடைப்பட்டதுடன், நில அளவை பணிகளை முன்னெடுக்காது நில அளவையாளர்களும் திரும்பிச் சென்றனர்.

குறித்த போராட்டம் முடிவடைந்த பின் எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

“நில அளவைத் திணைக்களத்தின் செயற்பாடுகளை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. விரைவில் அவர்களின் அலுவலகத்தை முடக்கி போராட்டம் நடத்துவோம்.

“எமது தன்மானத்தை இழந்து வாழ நாங்கள் விரும்பவில்லை. இராணுவ முகாமுக்கு முன்னால் தான் போராட்டம் நடத்தினோம். இராணுவம் எம்மை சுட விரும்பினால் சுடலாம். மானமுள்ள தமிழன் எதற்கும் அஞ்சமாட்டான்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X