Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2018 ஏப்ரல் 09 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணி விடுவிப்புக்கான உத்தியோகபூர்வ வரைபடம் பாதுகாப்புத் தரப்பினரிடமிருந்து இன்னமும் கிடைக்கப் பெறவில்லை என மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிகின்றன.
தமிழ் சிங்களப் புத்தாண்டுப் பரிசாக வலி.வடக்கில் காணி விடுவிக்கப்படும் என இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க, கடந்த சில தினங்களுக்கு முன்னர் நல்லிணக்கபுரத்தில் நடைபெற்ற வீடு கையளிப்பு நிகழ்வில் தெரிவித்திருந்தார்.
கடந்த வியாழக்கிழமை (05) வறுதலைவிளானில் வீடு கையளிப்பு நிகழ்வு நடைபெற்ற போது, மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் பொ.சுரேஷ் எதிர்வரும் 16ஆம் திகதி வலி.வடக்கில் 650 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு பாதுகாப்புத் தரப்பினரிடமிருந்து காணி விடுவிப்புக்கான உத்தியோகபூர்வ வரைபடம் இன்னமும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுவனிலிருந்து – மயிலிட்டிச் சந்தி வரையிலான பிரதான வீதியில், சுமார் 4 கிலோ மீற்றர் நீளமான பகுதி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளது. பாதுகாப்புத் தரப்பினரின் முன்னரங்க வேலிகள் இப்பகுதியில் அகற்றப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் இந்த வீதியும், இதன் மேற்குப் புறமாகவுள்ள காணிகளும் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக மாவட்டச் செயலக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
பாதுகாப்புத் தரப்பினரின் உத்தியோகபூர்வ வரைபடம் கிடைக்காமல் எதனையும் உறுதியாகத் தெரிவிக்க முடியாது என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago