2025 மே 17, சனிக்கிழமை

’காணிகள் தொடர்பான தகவல்களை தந்துதவும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

 

முப்படைகள், பொலிஸார் ஆகியோர் நிலைகொண்டுள்ள காணிகள் தொடர்பிலான தகவல்களைத் தந்துதவுமாறு, காணி உரிமையாளர்களிடம் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கோரியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனால் படைத்தரப்பு, பொலிஸாரால் பயன்படுத்தப்படும் யாழ். மாவட்டத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு, அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்தின் அடிப்படையில், யாழ். மாவட்டத்தில் முப்படையினர், பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகள் தொடர்பான விவரங்களை, காணிகளின் உரித்தாளர்கள் அறியத்தருவதன் மூலம், அக்காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு உரிமை கோருபவர்களிடம் மீளக் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனடிப்படையில், இதற்காக தயாரிக்கப்பட்ட விசேட விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து உரிமைகோரலுக்கான தகுந்த ஆதாரத்துடன் அல்லது தகுந்த விளக்கத்துடன் மீளப்பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, காணி உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த விண்ணப்பப் படிவத்தை, ஆளுநர் செயலகம், யாழ் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் அல்லது வடமாகாண சபையின் https://np.gov.lk/ என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

காணி உறுதியின் பிரதியுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை, இணைத்து, செப்டெம்பர் மாதம் 09ஆம் திகதிக்கு முன்னர் 'காணி கோரல் ' வடக்கு மாகாண ஆளுநர் செயலகம், பழைய பூங்கா, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .