Freelancer / 2023 மார்ச் 03 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்
காணிப் பிரச்சினைகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் தலைமையிலான கலந்துரையாடல், முல்லைத்தீவு - உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில், நேற்று (02) மாலை நடைபெற்றது.
மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் காணி விடயங்கள் தொடர்பாகவும், ஏனைய காணி விடையங்களுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாகவும் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்த கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா மற்றும் காணி அமைச்சின் செயலாளரும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருமான ம.பற்றிக்டிறஞ்சன், மாகாண காணி ஆணையாளர் ஆ.சோதிநாதன்,உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.
மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதேச செயலாளர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர். (N)
30 minute ago
47 minute ago
18 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
47 minute ago
18 Feb 2026